சமூக வலைதளங்களில் சமீபகாலங்களாக  சிரிப்பு தரும் வீடியோக்களில், தற்போது புதிதாக ஒரு புருஷன்-பொண்டாட்டி வீடியோ வைரலாகி வருகிறது. இதில், ஒரு பெண் தனது கணவனின் பாக்கெட்டில் இருந்து தவறி விழுந்த பணத்தை மின்னல் வேகத்தில் எடுத்து மறைத்து, அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.

இந்த வீடியோவை பார்த்தவர்கள், “இப்படி ஒரு தந்திரமா?” என்று வியந்து, சிரிப்புடன் அதை பகிர்ந்து வருகின்றனர். இன்ஸ்டாகிராமில்  பதிவேற்றப்பட்ட இந்த வீடியோ, கோடிக்கணக்கான பார்வைகளைப் பெற்று, இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

View this post on Instagram

 

A post shared by Sumit Uniyal (@sumit_uniyal_143)

வீடியோவில், பெண் ஒருவர் தனது தலைமுடியைக் கட்டிக் கொண்டிருக்கும்போது, அவரது கணவன் அருகில் நடந்து செல்கிறார். அப்போது, அவரது பாக்கெட்டில் இருந்து பணம் தரையில் விழுகிறது.

இதை உடனடியாகக் கவனித்த பெண், கண்ணிமைக்கும் நேரத்தில் அந்தப் பணத்தை எடுத்து, தனது தலைமுடிக்குள் தந்திரமாக மறைத்து விடுகிறார். கணவன் தேடி பார்க்க முயலும்போதும், அவருக்கு எதுவும் தெரியாமல் போக, இந்த தந்திரமான செயல் பார்ப்பவர்களை வியப்பில் ஆழ்த்துகிறது.

“இந்த பொண்ணு தன்னோட கணவனையே இப்படி ஏமாத்திட்டா!” என்று ஒரு பயனர் கமெண்ட் செய்ய, “இது மாதிரி தில்லாலங்கடி வேலை யாரு பண்ணுவாங்க!” என்று மற்றொருவர் கிண்டலாக பதிவிட்டுள்ளார்.