நடிகர் ஷாருக்கான் நடிப்பில் “பதான்” படம் சென்ற 25-ம் தேதி உலகளவில் வெளியாகியது. சுமார்  4 வருடங்களுக்கு பின் ஷாருக்கான் படம் வெளியானதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்த படத்தில் நடிகை தீபிகா படுகோன், நடிகர் ஜான் ஆபிரகாம் உள்ளிட்டோர் நடித்து உள்ளனர். பதான் படம் ரிலீஸ் ஆகுவதற்கு முன்னதாக பல சர்ச்சைகளில் சிக்கியது. இதனால் அதுவே அப்படத்திற்கு கூடுதல் விளம்பரமாக அமைந்தது.

இந்நிலையில் பதான் படமானது உலகளவில் வெளியாகி வசூலில் தெறிக்கவிட்டு வருகிறது. பதான் படம் வெளியான முதல்நாளில் மட்டும் உலக அளவில் 106 கோடி ரூபாயை வசூல் செய்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதன் வாயிலாக கன்னட நடிகர் யஷ் நடிப்பில் வெளியாகிய கே.ஜி.எப்-2 திரைப்படத்தின் வசூல் சாதனையை “பதான்” முறியடித்துள்ளது. அதாவது, கே.ஜி.எப்-2 படத்தின் முதல்நாள் வசூல் சாதனையை முறியடித்து, இந்தி மொழிப் படங்களில் அதிக வசூல் சாதனை படைத்த படம் என பதான் சாதனை படைத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.