வருடந்தோறும் நடைபெறும் “பரிக்ஷா பே சர்ச்சா” (PPC) நிகழ்ச்சியில் மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடுவது வழக்கம் ஆகும். அதாவது வாழ்க்கை மற்றும் தேர்வுகள் குறித்த பல தலைப்புகளில் பிரதமர் கலந்துரையாடுவார். அந்த வகையில் நடப்பு ஆண்டின் பரிக்ஷா பே சர்ச்சா நிகழ்ச்சியானது டெல்லியிலுள்ள தல்கடோரா உள் விளையாட்டு அரங்கில் இன்று (ஜன,.27) காலை 11 மணிக்கு நடைபெற்றது.

இந்நிகழ்ச்சி தூர்தர்ஷனில் நேரடியாக ஒளிபரப்பப்படும் என்றும் இதில் அதிக அளவிலான மாணவர்கள் பங்கேற்க இருக்கிறார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இது தொடர்பாக மத்திய கல்வியமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியதாவது “தல்கடோரா மைதானத்தில் பிரதமர் மோடியுடன் சுமார் 2,400 மாணவர்கள் கலந்துகொண்டுள்ளனர்.

இந்த நிகழ்ச்சிக்காக மொத்தம்  20 லட்சம் கேள்விகள் பெறப்பட்டது. இதில் குடும்ப அழுத்தம், மன அழுத்த மேலாண்மை, நியாயமற்ற வழிகளைத் தடுப்பது, ஆரோக்கியமாக இருப்பது எப்படி, தொழில் தேர்வு ஆகிய பல்வேறு தலைப்புகளின் கீழ் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் குறிப்பிட்ட கேள்விகளை தேர்வுசெய்துள்ளது.