ஈரோடு பகுதியில் உள்ள ரயில்வே நிலையம் அருகே ரவுண்டானா பகுதி அமைந்துள்ளது. அப்பகுதியில் காளை மாட்டு சிலை ஒன்று காணப்படுகிறது. ஈரோட்டில் நினைவுச் சின்னமான இந்த காளை மாட்டு சிலை அப்பகுதியின் மையத்தில் அமைந்துள்ளதால் அப்பகுதி எப்போதும் பரபரப்பாகவே காணப்படும். இந்நிலையில் ரவுண்டானா பகுதிக்கு வரும் பேருந்து ,கார், பைக் போன்ற வாகனங்கள் அதிக அளவில் வருவதால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் அடிக்கடி ஏற்படுகிறது.

இதனால் இந்த பகுதியில் 24 மணி நேரமும் பொதுமக்கள் நடமாடிக் கொண்டே இருப்பார்கள். இதைத் தொடர்ந்து தமிழர்களின் வீர விளையாட்டை குறிக்கக்கூடிய ஜல்லிக்கட்டு நினைவு கூறும் விதமாக இந்த காளை மாட்டு சிலை ரவுண்டானா பகுதியில் அமைந்துள்ளது. அதில் காளை மாட்டை வாலிபர் அடக்குவது போன்று சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் முதியவர் ஒருவர் அந்த சிலையிடம் இடம் சென்று அதில் உள்ள வாலிபரிடம் பேச்சு கொடுத்துக் கொண்டு காளை மாட்டின் சிலையை கயிற்றினால் கட்டி இழுத்தார்.  இதனை வீடியோவாக பதிவு செய்த பொதுமக்களில் ஒருவர் இணையதளங்களில் வெளியிட்ட நிலையில்  இணையதள வாசிகள் அதிக அளவில் பகிர்ந்து வருகின்றனர். அந்த வீடியோவில் இணையதள வாசிகள் காளை மாட்டின் உரிமையாளர் கிடைத்துவிட்டார் என்று கருத்து பதிவிட்டிருந்தார். முதியவர் மதுபோதையில் இருந்ததால் இவ்வாறு செய்தாரா? என்பது தெரியவில்லை. மேலும் முதியவர் காளை சிலையை கட்டி இழுத்த சம்பவம் அப்பகுதியில் வழியாக சென்றவர்கள் வேடிக்கை பார்த்தபடி சென்றனர்.