தர்மபுரி மாவட்டத்தில் உள்ள தளவாய்அள்ளி கிராமத்தில் தங்கவேல் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் தங்கவேல் தனது நண்பரான கிருஷ்ணன் என்பவர் உடன் மோட்டார் சைக்கிளில் கிருஷ்ணாபுரம் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த மினி லாரி மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது.

இந்த விபத்தில் நிலைதடுமாறி கீழே விழுந்த தங்கவேல் லாரி சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அறிந்த போலீசார் அங்கு சென்று தங்கவேலின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தப்பி ஓடிய மினி லாரி டிரைவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.