திருப்பூர் மாவட்டத்தில் உள்ள கருவம்பாளையம் மகாகாளியம்மன் கோவில் அருகே தனியாருக்கு சொந்தமான நிதி நிறுவனம் செயல்பட்டு வந்தது. அந்த நிறுவனத்தில் திருப்பூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட நபர்கள் ஒரு லட்சம் முதல் 10 லட்ச ரூபாய் வரை மாதச் சீட்டில் சேர்ந்து பணம் செலுத்தியுள்ளனர். இந்நிலையில் முதிர்வு காலம் முடிந்த பிறகும் சம்பந்தப்பட்டவர்களுக்கு பணத்தை கொடுக்காமல் நிதி நிறுவனத்தினர் மோசடி செய்தனர்.

இதனால் அந்த பகுதி மக்கள் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தனர். அதில் மோசடியில் ஈடுபட்ட தனியார் நிதி நிறுவன உரிமையாளரான கார்த்திக்கை கைது செய்து பணத்தை மீட்டு தர வேண்டும் என குறிப்பிட்டுள்ளனர். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.