விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கல்பட்டு விநாயகர் கோவில் தெருவில் பாபுராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சென்னை பல்லாவரத்தை சேர்ந்த ஜெயக்குமார், சக்திவேல், சரவணன் ஆகியோர் அறிமுகமாகினர். இந்நிலையில் சக்திவெல் உள்ளிட்ட 3 பேரும் சென்னை நங்கநல்லூரை சேர்ந்த ஹரிகுமார் என்பவர் ரயில்வே துறையில் பலருக்கு வேலை வாங்கி கொடுத்துள்ளார். உங்களுக்கு தெரிந்தவர்கள் இருந்தால் பணம் கொடுத்து வேலையை வாங்கிக் கொள்ளலாம் என பாபுராஜுடன் கூறியுள்ளனர். இதனை நம்பி பாபுராஜ் ஹரிகுமாரை சந்தித்து தனக்கு தெரிந்த ராமலிங்கம், தேவி, மகாலிங்கம், சுந்தரவள்ளி ஆகியோருக்கு வேலை வாங்கி கொடுப்பதற்காக 18 லட்சத்து 80 ஆயிரம் ரூபாயை கொடுத்துள்ளார்.

அதனை வாங்கிக் கொண்ட ஹரிகுமார் உள்ளிட்ட 4 பேரும் ரயில்வே துறையில் வேலை வாங்கி கொடுக்காமல் பணத்தை மோசடி செய்து விட்டனர். இதுகுறித்து பாபுராஜ் விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் ஹரிகுமார், சக்திவேல், சரவணன், விஜயகுமார் ஆகிய 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.