நீலகிரி மாவட்டத்தில் உள்ள கவுண்டன் கொல்லி பகுதியில் வசிக்கும் ராஜேஷ், ரவி, சிவகுமார், ஜீவா ஆகியோர் ஆட்டோவில் கூடலூர் நோக்கி சென்று கொண்டிருந்தனர். இந்நிலையில் கல்லிங்கரை பாவனா நகரில் சென்றபோது கூடலூரில் இருந்து வந்த மினி லாரி ஆட்டோ மீது நேருக்கு நேர் மோதியது.

இந்த விபத்தில் ஆட்டோவில் வந்த 4 பேரும் படுகாயமடைந்தனர். அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் மினி லாரி டிரைவர் பாலகிருஷ்ணன் என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.