கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கதிரேபள்ளி பகுதியில் குடியப்பா என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். சம்பவம் நடைபெற்ற அன்று குட்டியப்பா வேலைக்கு சென்றுவிட்டு மாலை வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது வீட்டின் கதவு திறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்த குடியப்பா வீட்டிற்குள் சென்று பார்த்தார்.

அப்போது பீரோவில் இருந்த 2 பவுன் தங்க நகை, 500 கிராம் வெள்ளி பொருட்கள் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து குடியப்பா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.