திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள திருப்பதிசாரம் கீழூரில் ஒரு பெண் வசித்து வருகிறார். இந்நிலையில் அதே பகுதியில் வசிக்கும் சுயம்பு(50), ஸ்டாலின்(46), செல்வகுமார்(46), சுப்பிரமணி(36), வில்சன்(47), ஐயப்பன்(44), ரங்கசாமி(48) ஆகியோர் அந்த பெண்ணை தகாத வார்த்தைகளால் திட்டி கேலி செய்துள்ளனர். இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் பழவூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் 7 பேர் மீது வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.