தமிழ்நாட்டின்  முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்கள் தொடங்கி வைத்த ரூ 1000 மகளிர் உரிமைத்தொகை இணையத்தில் பேசு பொருளாகியுள்ளது.

தமிழ்நாட்டின் முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் திராவிட முன்னேற்ற கழகம் ஆட்சிக்கு வந்தால் குடும்ப தலைவிகளுக்கு  ரூபாய் 1000 உரிமை தொகையாக  வழங்கப்படும் என வாக்குறுதி அளித்திருந்தார். ஆனால் அவற்றை முறையாக வழங்குவதற்கு தாமதம் ஆனதால் விமர்சனத்திற்கும் உள்ளானார்.

இந்நிலையில் தேர்ந்தெடுக்கப்பட்ட குடும்ப தலைவிகளுக்கு  ரூ 1000 உரிமைத் தொகை இன்று அனுப்பப்பட்டதை தொடர்ந்து, இல்லத்தரசிகளும்  முதலமைச்சர்  அறிவித்த ரூ1000  உரிமை தொகை தங்களுக்கு வந்து விட்டதாக சமூக வலைதளங்களிலும், செய்தி சேனல்களுக்கு பேட்டியாகவும், சிலர் தங்களின் வீடுகளுக்கு முன்பு கோலமாகவும் வரைந்து முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி தெரிவித்து வந்தனர்.

மேலும் அரசியல் பிரமுகர்கள், பிரபலங்கள், பொதுமக்கள், நெட்டிசங்கள் என பலரும் தொடர்ச்சியாக தங்களது வாழ்த்துக்களை இத்திட்டத்திற்கு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் பிரபல யூட்யூப் சேனலான  யூடூ புரூட்டஸ் தங்களது ட்விட்டர் பக்கத்தில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் அறிவித்த ரூபாய் ஆயிரம் உரிமைத் தொகை பெண்களுக்கு கிடைத்து விட்டது. பிரதமர் மோடி அறிவித்த ரூபாய் 15 லட்சம் பணம் எங்கே என்பதை கேட்கும் விதமாக ? ரூபாய் ஆயிரம் இங்க  ரூபாய் 15 லட்சம் எங்க ? என கேள்வி எழுப்பி ட்விட்  செய்துள்ளார். இது தற்போது வைரலாகி வருகிறது.