பிபிசி நிறுவனம் வெளியிட்ட பிரதமர் மோடி குறித்த ஆவணப்படம் இந்தியாவில் தடை செய்யப்பட்டது. இதில் குஜராத் கலவரங்கள் போன்ற விஷயங்கள் இடம்பெற்று இருந்தது. இந்த விவகாரம் தொடர்பாக பிரிட்டிஷ் எம்பி பாப் பிளாக்மேன் கருத்து தெரிவித்துள்ளார். அதாவது, உச்சநீதிமன்ற தீர்ப்பை மேற்கோள் காட்டிய அவர், ஆவணப்படம் உண்மைக்கு புறம்பாக இருக்கிறது என்றும் பிபிசி இதை ஒளிபரப்பு செய்திருக்கக்கூடாது என்றும் குறிப்பிட்டார்.

மேலும் எம்பி பாப் பிளாக்மேன் பேசியதாவது, இந்தியாவுக்கும் இங்கிலாந்துக்கும் நன்மை பயக்கும் சுதந்திரமான வர்த்தக வளர்ச்சி பற்றி தற்போது பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். அதனால் இவைகளைச் சீர்குலைக்கச் செய்யும் எதுவும் வருத்தம் தரக்கூடியதே. இந்தியாவின் பொருளாதாரத்தை கட்டி எழுப்புவதில் பிரதமர் மோடியின் தலைமையில் இந்திய அரசானது குறிப்பிடத்தகுந்த வேலையை செய்துள்ளது என்றார்.