
செய்தியாளர்களிடம் பேசிய தமிழக மீன் வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், காசிமேடு துறைமுகம் என்பது, போட்டஸினுடைய கண்ட்ரோல்ல இருக்கு. அவுங்க வேலையை ஆரம்பிக்க போறாங்க… அதுல சுற்றுச்சூழல் உடைய அனுமதி பெறவேண்டிய ஒரு சூழ்நிலை ஏற்பட்டது. அதனால, சுற்றுச்சூழலுடைய அனுமதியை பெற்றவுடன், அதற்கான பணிகளை அவர்கள் தொடங்குவதாக, உறுதி அளித்து இருக்கின்றார்கள்.
ஆளுநர் அரசு அலுவலராக தூத்துக்குடிக்கு வரவில்லை, அவர் ஒரு தனியார் நிறுவன அழைப்பின் பேரில் சென்றிருக்கிறார். அதனால நான் இங்கே ( சென்னை ) வந்துள்ளேன். மீனவர்கள் இலங்கை கடற்படைகளால் பிடிக்கக்கூடிய சூழ்நிலை ஏற்பட்டு, இன்றைக்கு மீனவர்கள் எல்லாம் விடுதலை செய்யப்பட்டு இருக்கின்றார்கள்.
இன்றைக்கு கூட 15 மீனவர்கள் இலங்கையிலிருந்து திரும்பி வரப்பட்டு இருக்கின்றார்கள், மற்ற மீனவர்களும் வந்து விடுவார்கள். அவர்கள் படகுகளை விடுவிப்பதில்லை. அந்தப் படகுகளையும் மீனவர்களையும், விடுவிக்க வேண்டும் என்பது தான் மாண்புமிகு தமிழகத்தில் முதலமைச்சர் அவர்கள், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர்களுக்கு கடிதம் எழுதுவது, அது போல பிரதமருக்கு கடிதம் எழுதுவது, தொடர்ந்து வலியுறுத்துவது.
இது போன்ற நிகழ்வுகளை நடத்தி இருக்கின்றோம். அதுபோல ஏற்கனவே, ஒன்பது படகுகளை அங்கு வழக்கு மன்றத்தால் விடுவிக்கப்பட்டாலும், அந்த படகுகளை கொண்டு வருவதற்கான முயற்சிகளை, நாங்கள் பல்வேறு வகையிலே, ஒன்றிய அரசாங்கத்திற்கு தகவல் சொன்னாலும், இதுவரை அது நடைமுறை படுத்தப்படவில்லை.வெகு சீக்கிரத்திலே அந்த படகுகளை மீட்டு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை எடுப்போம் என தெரிவித்தார்.