திரிபுரா, மேகாலயா மற்றும் நாகாலாந்து ஆகிய மூன்று மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தல் அட்டவணையை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மேகாலயா மற்றும் நாகாலாந்து ஆகிய மாநிலங்களில் பிப்ரவரி 27-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும். மார்ச் 2-ம் தேதி மூன்று மாநிலங்களிலும் பதிவான வாக்குகள் எண்ணப்படும்.

மேகாலயா மாநிலத்தில் 60 உறுப்பினர்களைக் கொண்ட சட்டசபைக்கு பிப்ரவரி 27-ஆம் தேதி நடைபெற உள்ள தேர்தலில் 37 பெண்கள் உட்பட மொத்தம் 379 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளதாக மேகாலயா தலைமை தேர்தல் அதிகாரி எஃப்.ஆர்.கார்கோங்கோர்  தெரிவித்தார்.