ஆந்திர மாநிலத்தில் உள்ள காளஹஸ்தி சிவன் கோயில்களில் மகா சிவராத்திரி வெகு விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டும் வரும் 13ஆம் தேதியிலிருந்து சிவன் கோவில்களில் விழா ஆரம்பம் ஆகிறது. அதன்படி கண்ணப்பர் கோயிலில் வரும் 13ஆம் தேதி பக்தனுக்கு மரியாதை செலுத்தும் வகையில் பிரம்மோற்சவ கொடி ஏற்றப்பட உள்ளது. அதன் பிறகு பிப்ரவரி மாதம் 14ஆம் தேதி அனைத்து சிவன் கோயில்களிலும் தங்க கொடி மரத்தில் கொடி ஏற்றப்படும்.

இதனை அடுத்து தினந்தோறும் காலையும் மாலையும் ஞான பூங்கோதை தாயாரும் காளத்தீஸ்வரரும் வீதி உலா வருவர். அதன் பின்பு 18ஆம் தேதி சிவன் ராத்திரி முன்னிட்டு நந்தி வாகன சேவையும் லிங்கோத்பவ தரிசனமும் நடைபெற உள்ளது. இதனை தொடர்ந்து 19ஆம் தேதி தேர்திருவிழாவும் தெப்போற்சவமும் நடக்கும். அதன்பின்பு 20 ஆம் தேதி திருக்கல்யாண வைபோகமும், 23ஆம் தேதி கொடி இறக்கமும், 24ஆம் தேதி பூ பல்லக்கு சேவையும், 25ஆம் தேதி ஏகாந்த சேவையும் நடைபெற இருக்கின்றது.

இந்த விழாவை முன்னிட்டு காளஹஸ்தி முழுவதும் அலங்கார வளைவுகளும் தோரணங்களும் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் கோவில்கள் அனைத்தும் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டும் மிலிர்கின்றது. கோபுரத்தில் மராமத்து பணிகள் செய்து பளிச்சென காணப்படுகின்றது. அது மட்டுமல்லாமல் சிவன் ராத்திரிக்காக திருப்பதியில் இருந்து காளஹஸ்திக்கு வரும் பக்தர்களுக்கு ஆந்திரா அரசு சிறப்பு பேருந்துகளை இயக்க முடிவு செய்துள்ளது.