முன்னாள் முதலமைச்சரும் அ.தி.மு.க இடைக்கால பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி சென்னையில் இருந்து விமானம் வாயிலாக மதுரைக்கு வந்தடைந்தார். இதனிடையே விமானத்தில் உடன் பயணித்த ஒருவர் எடப்பாடி பழனிசாமியை அவதூறாக பேசி உள்ளார். விமானத்திலிருந்து இறங்கி பஸ்ஸில் வந்தபோது “துரோகம் செய்த எடப்பாடியுடன் பயணிக்கிறேன். 10.5% இடஒதுக்கீடு வழங்கி தென்மாவட்ட மக்களுக்கு துரோகம் செய்தவர்” என அந்நபர் பேசும் வீடியோவை சோஷியல் மீடியாவில் பதிவிட்டுள்ளார்.

இதையடுத்து மதுரை விமான நிலையத்தில் இபிஎஸ்-ஐ விமர்சனம் செய்து வீடியோ வெளியிட்ட ராஜேஸ்வரன் மீது அதிமுகவினர் அளித்த புகாரின் படி வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து ராஜேஷ்வரனை விமான நிலைய காவல்துறையினர் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். ராஜேஷ்வரன் சிங்கப்பூரில் கட்டிட தொழிலாளியாக பணியற்றி வருகிறார். இந்நிலையில் சொந்த நாட்டிற்கு வந்ததும் தன் சர்ச்சை பேச்சால் இப்போது அந்த இளைஞர் சிக்கியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து காவல்துறையினர் அந்த இளைஞரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.