செய்தியாளர்களிடம் பேசிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ,  எதிர்காலத்தில் ஜனநாயகத்தை காக்க முடியுமா? எதிர்காலத்தில் இந்த மத சார்பற்ற தன்மையை பாதுகாக்க முடியுமா? என்ற நிலை ஏற்பட்டு இருக்கிறது. ஆனால் பாதுகாக்க முடியும் என்ற நம்பிக்கையோடு தான் இந்தியாவில்  இந்த கொள்கையில் நாட்டமுள்ள கட்சிகள் எல்லாம் ஒன்று சேர்ந்து இந்தியா என்ற அமைப்பை உருவாக்கி, ஒரு கூட்டணியினை உருவாக்கியிருக்கிறோம். அந்த கூட்டணி ஐந்து கூட்டங்களை நடத்திவிட்டது.

நான் நான்கு கூட்டத்திற்கு சென்று விட்டேன். அனேகமாக நெருடல் இல்லாமல்… கருத்து  வேறுபாடு இல்லாமல் இந்தியா கூட்டணி இந்த நாடாளுமன்ற தேர்தலை சந்தித்து வெற்றி பெறும் என்று நம்பிக்கை இருக்கிறது. பாராளுமன்ற வரலாற்றில் இல்லாத அளவுக்கு 146 எம்.பி.களை வெளியேற்றிவிட்டு,  சட்ட மசோதாகளை ஒவ்வொரு நிமிடத்தில் நிறைவேற்றி ஜனநாயக படுகொலை இந்தியாவில் நடந்தது இல்லை.

ஆனால் சுதந்திர இந்தியாவின் நெருக்கடி நிலையை விட மோசமான சட்டங்களை கொண்டு வந்து 2024 இல் நடக்கின்ற நாடாளுமன்றத் தேர்தலை சந்திக்கப் போகின்ற இந்த நேரத்தில் பாஜக அரசை….  நரேந்திர மோடி அரசை ஆட்சி பீடத்தில் இருந்து நிச்சயம் மக்கள் தூக்கி எறிவார்கள். எதிர்க்கட்சிகள்  உருவாக்கிய இந்தியா கூட்டணி நாடு முழுவதும் மக்கள்  திரட்டும். பாஜகவை தோற்கடிக்கும் என்ற நம்பிக்கை உள்ளது என தெரிவித்தார்.