பாரா ஒலிம்பிக்கில் மூன்றாவது முறையாக பதக்கம் வென்ற தமிழகத்தின் வீரர் மாரியப்பன் தங்கவேலு, தனது சாதனைகளை தொடர்ந்துள்ளார். 2024 பாரீஸ் பாரா ஒலிம்பிக்கில், 1.85 மீட்டர் உயரம் தாண்டி வெண்கலப் பதக்கம் வென்று, இந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ளார். முன்னதாக மாரியப்பன் 2016 ரியோ ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் மற்றும் 2020 டோக்கியோ பாரா ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் மாரியப்பன் இந்திய கிரிக்கெட் வீரரான விராட் கோலியை சந்தித்துள்ளார். அப்போது, விராட் கோலி தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இருவரும் சந்தித்தபோது எடுத்த புகைப்படம், சமூக வலைதளங்களில் வைரலாகிறது.