சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணியின் தலைவர் மகேந்திர சிங் தோனி (MS Dhoni) ஆர்சிபி (RCB) அணியிடம் ஐபிஎல் 2024 தொடரின் கடைசி லீக் போட்டியில் தோல்வியடைந்த பிறகு கோபத்தில் டிவியை உடைத்ததாக வெளியான செய்தி சமூக வலைதளங்களில் வைரலானது. இந்த செய்தியை மறுத்து CSK அணியின் பிசியோதெரபிஸ்ட் டாமி சிம்செக் கூறியதாவது, தோனி எந்தவிதமான பொருட்களையும் உடைத்ததில்லை என கூறினார்.
இந்த நிலையில், Cricandid என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில், முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் மூலம் இந்த தகவல் பரப்பப்பட்டது. இதனை மறுத்து டாமி சிம்செக், இது பொய்யான செய்தி என்றும், தோனி எப்போது போட்டியில் தோல்வி அடைந்தாலும், அவரை கோபமாக கண்டதில்லை என்று கூறியுள்ளார்.
இந்த வதந்திகள் பரவிய நிலையில், ரசிகர்கள் சிம்செக்கின் கருத்தை வைரலாக்கி வருகின்றனர். மேலும், தோனி போன்றவர் கண்ணியமான விதத்தில் செயல்படுவார் என்பதால், அவரது உணர்ச்சிகளை துஷ்பிரயோஜனம் செய்வது தவறானது எனவும் ரசிகர்கள் கூறியுள்ளனர்.