கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பூவன்கோடு இரவிபுரத்துவிளை பகுதியில் டேவிட் செல்வராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஜோயல் ஜெபசிங்(36) என்ற மகன் உள்ளார். கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு ஜோயலுக்கு அபிஷா(25) என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதியினருக்கு 2 வயதுடைய பெண் குழந்தை இருக்கிறது.

இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அபிஷா தனது கணவரை விட்டு பிரிந்து தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார். இதனால் மன உளைச்சலில் இருந்த ஜோயல் மதுவில் விஷம் கலந்து குடித்து மயங்கி விட்டார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஜோயல் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.