ரெட்மி ஸ்மார்ட் போனுக்கு பெரிய அளவில் தள்ளுபடி கிடைக்கிறது. வாடிக்கையாளர்கள் அதிகம்  விரும்பக்கூடிய ஸ்மார்ட் போன்களில் ரெட்மிக்கும் தனியிடம் இருக்கிறது. ரெட்மி 9-ஐ ஸ்போர்ட் என்பது எப்போதும் வாடிக்கையாளர்களின் விருப்பங்களில் ஒன்றாக இருக்கிறது. ரெட்மி 9-ஐ ஸ்போர்ட் (Metallic Blue, 64GB) (4GB RAM) ஸ்மார்ட்போனின் விலையானது ரூ.9,999 ஆகும்.

25 சதவீத தள்ளுபடிக்குப் பிறகு அது ரூ.7,499க்கு வாங்கலாம். மேலும் வங்கி சலுகைகளின் கீழ் தனி தள்ளுபடியைப் பெறலாம். பிளிப்கார்டு ஆக்சிஸ் வங்கி கார்டு வாயிலாக பணம் செலுத்தி வாங்கினால் 5 சதவீதம் கேஷ்பேக் பெறலாம். அதோடு நீங்கள் ஒரு தனி தள்ளுபடியையும் பெறலாம். எக்ஸ்சேஞ்ச் ஆஃபரின் கீழ் தனியாக தள்ளுபடியைப் பெறலாம்.

பழைய ஸ்மார்ட் போனை பிளிப்கார்டு நிறுவனத்திடம் திருப்பி கொடுத்தால் ரூபாய்.6,950 வரை தள்ளுபடி பெறலாம். எனினும் அத்தகைய தள்ளுபடியை பெற, உங்கள் பழைய ஸ்மார்ட்போனின் நிலை நன்றாக இருக்க வேண்டும். அதன்படி அனைத்து சலுகைகளும் செயல்படுத்தப்பட்ட பிறகு நீங்கள் மலிவான விலையில் ரெட்மி 9-ஐ ஸ்போர்ட் ஸ்மார்ட்போனை வாங்கிக்கொள்ளலாம்.