ஈரோடு கிழக்கு சட்டப் பேரவை தொகுதிக்கு வருகிற பிப்,.27 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. அதில் தி.மு.க கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ், அதிமுக, நாம் தமிழர் கட்சி, அமமுக உள்பட சில சிறிய கட்சிகளும், சாதி கட்சிகளும் மற்றும் சுயேச்சைகள் போட்டியிடுகின்றனர். நேற்று (செவ்வாய்க்கிழமை) வேட்பு மனு தாக்கல் செய்வதற்கான கடைசி நாள் என்பதால் பலர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

இதற்கிடையில் இடைத் தேர்தலில் அமமுகவுக்கு குக்கர் சின்னம் ஒதுக்க இயலாது என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் அமமுக வேட்பாளர் ஏ.எம்.சிவபிரசாந்த் போட்டியிட மாட்டார் என அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் கட்சியின் பொதுச் செயலா் டிடிவி தினகரன் அறிவித்து உள்ளார். முன்னதாக ஓபிஎஸ் ஆதரவாளர் செந்தில்முருகன் வேட்பு மனுவை வாபஸ் பெறுவார் என அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.