அரியானா மாநிலத்தில் உள்ள அம்பாலாவில் யமுனா நகர் – பன்ஞ்குலா நெடுஞ்சாலையில் நேற்று லோடு ஏற்றி சென்ற லாரி ஒன்று முன்னாள் சென்று கொண்டிருந்த பேருந்து மீது மோதியது. இந்த விபத்தில் லாரி கவிழ்ந்து விழுந்தது. இதில் ஏழு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். மேலும் 4 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
இதனையடுத்து காயமடைந்தவர்கள் மீட்கபட்டு அருகே உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். மேலும் இரு வாகனங்களின் டிரைவர்களும் இந்த விபத்தில் உயிர் தப்பியுள்ளனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பஸ் மீது லாரி மோதிய விபத்தில் ஏழு பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.