
நெல்லை மாவட்டத்தில் அனைத்து மக்களும் கொண்டாடும் பங்குனி உத்திர திருநாளை முன்னிட்டு மாவட்ட கலெக்டர் சுகுமார் 11.4.2025 அன்று உள்ளூர் விடுமுறை அறிவித்துள்ளார். இந்த விடுமுறை அரசு பொது தேர்வுகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில் விடப்பட்டுள்ளது என்றும்,அனைத்து மாநில அரசு அலுவலகங்களுக்கும் நிறுவனங்களுக்கும் விடுமுறை எனவும் கூறியுள்ளார்.
அதோடு இந்த நாளில் அரசு பொது தேர்வுகள் எதுவும் இருந்தால் பொது தேர்வு எழுதும் பள்ளி மாணவர்கள், பொதுத் தேர்வு நடைபெறும் பள்ளிகள்,மற்றும் பொதுத்தேர்வு தொடர்பாக பணியாற்றி வரும் ஆசிரியர்களுக்கு இந்த உள்ளூர் விடுமுறையானது பொருந்தாது என்றும், இந்த நாளில் நடத்தப்படும் அரசு பொது தேர்வுகள் எவ்வித மாறுதலுமின்றி அதே தேதியில் நடைபெறும் எனவும் அறிவித்துள்ளார்.
இதைத்தொடர்ந்து செலவாணி முறிச்சட்டம் 1881 கீழ் இந்த உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படவில்லை என்பதால் இந்த விடுமுறை வங்கிகளுக்கும் பொருந்தாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த விடுமுறையை ஈடு செய்வதற்காக வரும் 4வது சனிக்கிழமை அதாவது 26.04.2025 அன்று வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.