சுமார் 2 முதல் 3 வயதுடைய மழலையர் பள்ளிச் சிறு குழந்தைகள், பள்ளி ஜன்னல் கம்பிகளுக்குப் பின்னால் நின்று, அழுதுகொண்டே வீட்டிற்கு அனுப்பும்படி கெஞ்சும் உருக்கமான வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி, பலரது மனதை உடைத்துள்ளது. அந்தச் சிறுவர்கள், “அம்மா மடியில் படுத்துப் பால் குடிக்க வேண்டும்” என்று ஆசிரியரிடம் கெஞ்சுகிறார்கள்.

இந்த வீடியோவைப் பதிவிட்ட சூரஜ் குமார் பௌத் (Suraj Kumar Bauddh) என்பவர், “2-3 வயதுள்ள குழந்தைகளை எல்.கே.ஜி. (LKG) என்ற பெயரில் பள்ளிக்கு அனுப்புவது கல்வி அல்ல, இது குழந்தைத்தனத்தின் திருட்டு” என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த வீடியோ, இவ்வளவு சிறிய வயதில் குழந்தைகளை முறைப்படுத்தப்பட்டப் பள்ளிச் சூழலுக்கு அனுப்புவதுச் சரியா என்ற விவாதத்தைத் தூண்டியுள்ளது.

இணையவாசிகள் பலரும், குழந்தைகளின் மனக் குழப்பத்தையும் தாயின் அரவணைப்பின் தேவையையும் உணர்ந்து, வேதனையுடன் தங்கள் கருத்துக்களைப் பதிவிட்டு வருகின்றனர்.