சமூக வலைதளங்களில் ஒரு வீடியோ வேகமாகப் பரவி வருகிறது. நண்பர்களுடன் சேர்ந்து கொண்டாடிய பிறந்தநாள் ஒன்றில் நடந்த விபரீதத்தைப் பற்றியதுதான் இந்த வீடியோ. பிறந்தநாள் கொண்டாட்டத்தின்போது, ஒரு சில நண்பர்கள் சேர்ந்து கேக்கில் பட்டாசு சரத்தை மறைத்து வைத்து, கிரீம் மூலம் அதை மூடிவிட்டனர்.
பிறகு, அந்த கேக்கைக் கொண்டு வந்து, பிறந்தநாள் கொண்டாடும் நண்பனிடம் மெழுகுவர்த்தியை ஏற்றச் சொன்னார்கள். நண்பன் மெழுகுவர்த்தியைப் பற்றவைத்தபோது, கேக்கினுள் மறைத்து வைக்கப்பட்டிருந்த பட்டாசு சரம் தீப்பற்றிக்கொண்டது.
View this post on Instagram
“>
பட்டாசு வெடித்ததில் மிகப்பெரிய சத்தம் ஏற்பட்டு, கேமராவுக்கான பிரேம் முழுவதும் நெருப்புக் கோளமாக மாறியது. இதனால் பயந்துபோன நண்பர்களும், பிறந்தநாள் நண்பனும் அங்கிருந்து வேகமாக ஓடினர். இதனால் பெரிய விபத்து ஏதும் நடக்கவில்லை. இந்த வீடியோவை இதுவரை லட்சக்கணக்கானோர் பார்த்துள்ளனர், பலர் லைக் செய்துள்ளனர்.
ஆனால், பல பயனர்கள் இந்தக் கேலிக்கான செயலைக் கடுமையாக விமர்சித்துள்ளனர். “இப்படிப்பட்ட கேலிக்கான செயல்கள் பெரிய விபத்துகளை ஏற்படுத்தும்,” என்றும், “இது மிகவும் மோசமான மற்றும் அநாகரீகமான நகைச்சுவை” என்றும் கருத்து தெரிவித்துள்ளனர்.
