
காவேரியில் தமிழகத்துக்கு உரிய நீரை பெற்றுத் தராத வகையில் தமிழக அரசை பலரும் கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார்கள். குறிப்பாக எதிர்க்கட்சியான அதிமுக – பாஜக தொடர்ச்சியாக விமர்சனம் செய்கின்றனர். அது மட்டுமல்லாமல் காங்கிரஸ் தலைமையில் தேசிய அளவிலான கூட்டணியில் திமுக இருப்பதால் காங்கிரஸ் கட்சியையும் சேர்த்தே விமர்சிப்பவர்கள் பேசி வருவதால், இது திமுக – காங்கிரஸ் கூட்டணிக்கு பெறும் பின்னடைவை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆகவே இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்களும் பேசுகின்றனர். அந்த வகையில் காவிரி விஷயத்தில் திமுக – காங்கிரஸ் இரட்டை நிலைப்பாடா ? போன்ற கேள்விகளுக்கு பதில் அளித்த தமிழக காங்கிரஸின் முன்னாள் தலைவரும், ஈரோடு தெற்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினரும், மூத்த தலைவருமான இ.வி.கே.எஸ். இளங்கோவன்,
காவேரி பிரச்சனையை பொருத்தவரை நமக்கு வயிற்றுப் பிரச்சனை, நமக்கு தாகப் பிரச்சனை எப்படி இருக்கிறதோ அதேபோலத்தான் கர்நாடகாவில் இருக்கின்றவருக்கும் அதே பிரச்சனை. நம்மைப் பொறுத்தவரை சுமூகமாக பேசி , அதை தீர்த்துக் கொள்ள வேண்டும் என்ற முனைப்பில் இருக்கிறார்கள். ஆணையத்திடம் போயிருக்கிறார்கள். அது நடக்கவில்லை என்று சொன்னால் துரைமுருகன் அவர்கள் சொல்லி இருக்கிறார். உச்ச நீதிமன்றத்தை நாடுவோம் என்று என தெரிவித்தார்.