கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள குளச்சல் பயணியர் விடுதி சந்திப்பு அருகே 4 மாடிகள் உடைய அடுக்குமாடி குடியிருப்பு அமைந்துள்ளது. இந்த மாடியில் இருக்கும் முதல் இரண்டு தளத்தில் பர்னிச்சர் கடையும், 3 மற்றும் 4-வது தளத்தில் குடியிருப்புகளும் இருக்கிறது. இந்நிலையில் பர்னிச்சர் உள்பட கனரக பொருட்களை மேலே எடுத்துச் செல்வதற்காக பக்கவாட்டில் வெளிப்புறமாக சரக்கு லிப்ட் அமைக்கப்பட்டிருக்கிறது.

நேற்று மாலை ஊழியர்கள் 3-வது மாடியில் இருக்கும் குடியிருப்பு பகுதிக்கு பர்னிச்சர் பொருட்களை ஏற்றும் போது எடை தாங்காமல் லிப்ட் அறுந்து அந்தரத்தில் தொங்கியது. சில பர்னிச்சர் பொருட்கள் சாலையில் சிதறி விழுந்தது. அதிர்ஷ்டவசமாக அந்த நேரம் யாரும் இல்லாததால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அறிந்த நகராட்சி அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று லிப்ட்டை அகற்றி எடுத்து சென்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.