எல்ஐசி நிறுவனம் பாலிசிதாரர்களுக்கு நிதி உதவி வழங்கும் நடவடிக்கையுடன், பாலிசிகளுக்கு எதிராக கடன் தரும் வாய்ப்பையும் அறிமுகப்படுத்துகிறது. வழக்கமான முறையில் வங்கிகளில் இருந்து கடனை பெறுவதில் பல சவால்களை எதிர்கொள்ளும் நபர்களுக்காக இந்த வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. எல்ஐசிக்கு எதிராக கடன் வாங்க பாலிசிதாரர்கள் தங்களுடைய எல்ஐசி பாலிசியை பிணையமாக பயன்படுத்திக்கொண்டு அதை வைத்து கடன் பெறலாம். இது பயனுள்ளதாக இருக்கும். முதலில் எல்ஐசி பாலிசி உங்களிடம் இருந்தால் தான் எல்ஐசி பாலிசிக்கு எதிராக கடன் பெறுவதற்கான தகுதிகள் உண்டு.

18 வயது பூர்த்தி செய்திருக்க வேண்டும் .எல்ஐசி பாலிசிக்கு உத்தரவாதமான சரண்டர் மதிப்பு பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பதாரர் குறைந்தபட்சம் மூன்று வருடங்கள் எல்ஐசி பிரிமியத்தை முழுமையாக செலுத்தி இருக்க வேண்டும். எல் ஐ சி பாலிசிக்கு எதிராக ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் இரண்டு முறைகளிலும் விண்ணப்பித்து கடனை பெறலாம். ஆப்லைனில் விண்ணப்பிப்பதற்கு அருகில் உள்ள எல்ஐசி அலுவலகம் சென்று விண்ணப்பித்து பெறலாம். அசல் பாலிசி ஆவணத்தோடு தேவையான ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும். சரிபார்த்த பிறகு பாலிசி சரண்டர் மதிப்பில் 90% தொகை வழங்கப்படும்.