எல்ஜிஎம் படத்தின் டிரெய்லரை எம்.எஸ் தோனி மற்றும் சாக்ஷி சிங் தோனி வெளியிட்டனர்..

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் எம்எஸ் தோனியும் அவருடைய மனைவி சாக்ஷி சிங் தோனியும் சேர்ந்து தோனி என்டர்டைன்மெண்ட் என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ளனர். இந்த நிறுவனத்தின் மூலம் தற்போது எல்ஜிஎம் என்ற படத்தை தயாரித்துள்ளனர்.

இந்த படத்தை ரமேஷ் தமிழ்மணி இயக்க, ஹரிஷ் கல்யாண், இவானா, நதியா, யோகி பாபு போன்ற பல பிரபலங்கள் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். ஏற்கனவே எல்ஜிஎம் படத்தின் டீசரை பட குழு வெளியிட்டது. அது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

 

இந்நிலையில் தோனி என்டர்டெய்ன்மெண்ட் தயாரிக்கும் ‘Lets Get Married’ திரைப்படத்தின் பாடல்கள் மற்றும் டிரெய்லரை எம்.எஸ் தோனி மற்றும் சாக்ஷி சிங் தோனி வெளியிட்டனர். சென்னையில் நடந்த #LGM ஆடியோ மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் தல தோனியும் சாக்ஷி தோனியும் கிளிக் செய்து வெளியிட்டனர்.. மேலும் இந்த ஜூலை மாதம் படம் திரையரங்குகளில் வெளியாகும் எனவும் தெரிவித்துள்ளனர்.

https://twitter.com/DhoniLtd/status/1678397878728036352