செய்தியாளர்களிடம் பேசிய ஹிந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, இதுவரை இந்த ஆட்சி ஏற்பட்ட பிறகு மீட்கப்பட்ட நிலங்களின் சொத்து மதிப்பு 5,428 கோடி ரூபாய் இந்த ஆட்சி ஏற்பட்ட பிறகு மீட்டு இருக்கின்றோம்.  இந்து சமய அறநிலைத்துறையின் சார்பில் இருக்கின்ற தங்கத் தேர்கள் 67  திரு தேர்கள்  இன்றைக்கு நல்ல நிலையில் பயன்பாட்டில் இருக்கின்றன. அதேபோல்  கிட்டத்தட்ட 57 வெள்ளித் தேர்தல் இன்றைக்கு நல்ல நிலையில் பயன்பாட்டில் இருக்கின்றன.

ராமேஸ்வரத்தில் 12 ஆண்டுகள் ஓடாமல் இருந்த தங்கத்தேரை இந்த ஆட்சி வந்த பிறகுதான்…  பக்தர்களுடைய நேர்த்தி கடனைக்கு அர்ப்பணித்திருக்கின்றோம். சமயபுரத்திலே 11 ஆண்டுகள் ஓடாமல் இருந்த தங்க தேரை இந்த ஆட்சி வந்த பிறகுதான் மக்களுடைய நேர்த்திக்கடனுக்கு சமர்ப்பித்திருக்கின்றோம். திருத்தணியில் ஐந்து ஆண்டுகள் ஓடாமல் இருந்த தங்கத்தேரை இந்த ஆட்சி வந்த பிறகுதான் பக்தர்களுடைய நேர்த்திக்கடனுக்காக அர்ப்பணித்திருக்கின்றோம்.

திருத்தணியில் 15 ஆண்டுகள் ஓடாமல்  இருந்தும் வெள்ளித் தேரை இந்த ஆட்சி வந்த பிறகு தான் பக்தர்களுடைய நேர்த்தி கடனுக்கு அர்ப்பணித்திருக்கின்றோம். இந்த ஆட்சி ஏற்பட்ட பிறகு மூன்று புதிய தங்க தேர்களை உருவாக்க மாண்புமிகு தமிழக முதல்வர் உத்தரவிட்டிருக்கின்றார்.

நல்ல நல்லூர்  ஆஞ்சநேயர் திருக்கோயில்,நம்முடைய புரசைவாக்கம் கங்காதீஸ்வரர்  திருக்கோயில், தேவி பவனி அம்மன் திருக்கோவில் ஆகிய 3 கோவில்களுக்கு தங்க தேர்களும், 5  கோயில்களுக்கு வெள்ளி தோர்களும் அறிவித்திருந்தோம்.

திருக்கருக்காவூர்,  நெல்லையப்பர், இருக்கன்குடி, திருத்தணி,   சென்னையில் இருக்கின்ற காளிகாம்பாள் ஆகிய ஐந்து திருக்கோயில்களுக்கு வெள்ளித் தேர் அறிவிக்கப்பட்டு,  அதில் திருத்தணியில் 4.25 கோடி ரூபாய் மதிப்பீட்டில் வெள்ளித் தேர்   பணி நிறைவடைந்து,  பக்தர்களுடைய நேர்த்திக்கடனுக்கு அர்ப்பணித்திருக்கின்றோம்.

ஆகவே  இந்த ஆட்சியை பொருத்தவரை,’ இந்து சமய அறநிலைத்துறை பொறுத்தயை பொறுத்தவரை  மாண்புமிகு தமிழக முதல்வர் நேரடி கட்டுப்பாட்டில் திருப்பணிகளும்,  திருக்கோயில்களின் திருத்தேர் பணிகளும், புதிய தேர்களும்  அதே போல இந்த ஆட்சி ஏற்பட்ட பிறகு சுமார் 77 திருத்தேர்கள்,  மரதேர்கள் இன்றைக்கு 58 கோடி ரூபாய் செலவில் புதிதாக செய்து கொண்டிருக்கிறோம்.  கிட்டத்தட்ட 18 திருத் தேர்தல் பராமரிப்பு பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

இந்த ஆட்சி ஏற்பட்ட பிறகு,  நடைபெறுகின்ற திருப்பணிகள் என்பது இந்து சமய  அறநிலைத்துறையின் வரலாற்றில் ஒரு புரட்சியை ஏற்படுத்தி இருக்கின்றது. இந்த ஆட்சி ஏற்பட்ட பிறகு நடைபெறுகின்ற திருப்பணிகள் எல்லாம், வசைபாடியவர்கள் எல்லாம் வாழ்த்துகின்ற நிலையில்   இருக்கின்றார்கள்.  பக்தர்கள், இறையன்பர்கள், மகிழ்ச்சியோடு இருக்கின்றார்கள் என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறோம் என தெரிவித்தார்.