பிரபல இயக்குனர் அனுராக் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் படத்தில் நடிக்க விருப்பம் தெரிவித்து பேசிய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. 

2023 இல் பெரும் எதிர்பார்ப்பில் வெளியாக காத்திருக்கும் திரைப்படம் லியோ. படத்தில் நடிகர் விஜய் நடித்திருப்பது மட்டும் இதற்கு முக்கிய காரணமாக அல்லாமல் கூடுதலாக தமிழ் சினிமாவின் முக்கிய பிரபலங்கள் பலர் நடித்திருப்பதும் தான். அதன்படி, மிஸ்கின்,அர்ஜுன், திரிஷா, மன்சூர் அலிகான் உள்ளிட்ட முக்கிய பிரபலங்கள் தங்களது பங்களிப்பை செலுத்தியுள்ளனர். 

இந்நிலையில் பிரபல இயக்குனர் அனுராக் காஷ்யப்  லியோ படத்தில் கேமியோ கதாபாத்திரம் ஒன்றில் நடித்திருப்பதாக  சில தகவல்கள் இணையத்தில் வேகமாக கசிந்து வரும் நிலையில், அனுராக் காஷ்யப்  குறித்த தகவல்களை ரசிகர்கள் இணையதளத்தில் தேடி வரவே,

அனுராக் காஷ்யப் நேர்காணல் ஒன்றில், தான் லோகேஷ் கனகராஜ் படத்தில் நடிக்க ஆசைப்படுவதாகவும், அதிலும் அவர் படத்தில் சாகக்கூடிய கதாபாத்திரங்கள் மக்கள் மனதில் நிற்கும் அளவிற்கு காட்சிப்படுத்தப்பட்டிருப்பதால்,  முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதை காட்டிலும் லோகேஷ்  படத்தில் சாகும் காட்சியில் நடிக்க அதிகம் விரும்புவதாக தெரிவித்துள்ளார். இந்த வீடியோ அனுராக் காஷ்யப் அவர்களின் கேமியோ கதாப்பாத்திரம் மீதான எதிர்ப்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது.