லியோ பட சண்டை காட்சி குறித்து இயக்குனர் மிஸ்கின் அவர்கள் பேசிய வீடியோ இணைய தளத்தில் வைரலாகி வருகிறது.

2023 இல் சினிமா ரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கப்படும் திரைப்படங்களில் ஒன்றாக இருக்கும் லியோ மீதான  எதிர்பார்ப்பு என்பது நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. ஒருபுறம் படம் குறித்த சுவாரசியமான இணையத்தில் தகவல்கள் கசிந்து வர,  படத்தில் நடித்த சினிமா பிரபலங்கள் சிலர் லியோ படம் குறித்து பேசும்போது, ரசிகர்களின்  எதிர்பார்ப்பு என்னும் பசிக்கு சரியான விருந்தாக அது அமைந்து விடுகிறது. 

அந்த வகையில்,  பிரபல இயக்குனர் மிஷ்கின் நேர்காணல் ஒன்றில்  நடிகர் விஜய் மிகவும் அன்பானவர். அதற்கு உதாரணம் லியோ படத்தில் சண்டை காட்சியில் பெட்டி ஒன்றை என் தலையில் அடித்து உடைக்கும்  காட்சி ஒன்று இருந்தது. ஆனால் அந்த காட்சியில் நடிக்க நடிகர் விஜய் மறுத்துவிட்ட காரணத்தினால், இயக்குனர்  லோகேஷ் கனகராஜ் காட்சியை மாற்றி அமைக்க விரும்பினார்.

 ஆனால் காட்சி எப்படி வடிவமைக்கப்பட்டதோ, அதேபோல் காட்சிப்படுத்த கேட்டுக் கொண்டதற்கு பின் நடிகர் விஜய் அவர்களை சந்தித்து கேட்கும் போது, இந்த காட்சி உங்களை காயப்படுத்தும் அண்ணா, அதனால் வேண்டாம் என விஜய் கூற, தீவிர ஆலோசனைக்கு பிறகு கட்டாயம் இதை நீங்கள் செய்து தான் ஆக வேண்டும் என நான் கேட்டு கொண்டதற்காக விருப்பம் இல்லாமல் அக்காட்சியில் நடித்தார் என்று தெரிவித்தார். இதையடுத்து விஜய் மிகவும் அன்பானவர் என ஒருபுறம் ரசிகர்கள் அவரைப் புகழ்ந்தும், இயக்குனர்கள் பேச்சை அவர் கேட்பதில்லை என மறுபுறம் இகழ்ந்தும் வீடியோவை பகிர்ந்து வருகின்றனர்.