லால் சலாம் திரைப்படம் குறித்து அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது.

லால் சலாம் திரைப்படத்திற்கான போஸ்டரில் நடிகர் ரஜினிகாந்த் இடம் பெற்றிருந்தார். அந்த போஸ்டர் பரவலாக பேசப்பட்டு வந்த நிலையில், ரஜினிகாந்த் அவர்களின் அடுத்த படமாக இது இருக்குமா ? இதில் அவருடைய கதாபாத்திரம் என்னவாக இருக்கும் ? என பல யூகங்கள் தொடர்ச்சியாக இணையத்தில் வலம் வந்தன.  தற்போது லால் சலாம் படம் குறித்து அப்டேட் ஒன்று கிடைத்துள்ளது. அதன்படி,

லால் சலாம் படத்தின் இயக்குனரான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் படத்தை டிசம்பர் 8-ம் தேதி திரையரங்கில் வெளியிட திட்டமிட்டுள்ளதாகவும், படத்தில் விக்ராந்த் மற்றும் விஷ்ணு விஷால் ஆகியோர் முன்னிலை கதாப்பாத்திரத்தில் நடிக்க இருப்பதாகவும், படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றம் மட்டுமே அளிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இப்படத்தில் இசையமைப்பாளராக அனிருத் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. லால்  சலாம் படத்தில் ரஜினிகாந்த் அவர்களுக்கு ஏராளமான காட்சிகள் இருக்கும் என அவரது ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சிறப்பு தோற்றம் மட்டும் தான் என வெளியான தகவல் அவரது ரசிகர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.