கொடநாடு கொலை – கொள்ளை வழக்கில் 200க்கும் மேற்பட்ட சாட்சிகள் இருக்கின்றன. குறிப்பிட்ட ஒன்பது சாட்சிகளில் விசாரிக்க வேண்டும் என்று நீலகிரி நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்து இருந்ததாகவும்,  ஆனால் ஒரு சாட்சியை மட்டும் விசாரிக்க அனுமதி அளித்துவிட்டு… அதாவது  கொடநாடு மேலாளரை மட்டும் விசாரிக்க அனுமதி அளித்துவிட்டு மற்றவர்களை விசாரிப்பதற்கு நீலகிரி நீதிமன்றம் அனுமதி மறுத்து இருக்கிறது.

எனவே அந்த உத்தரவை ரத்து செய்து தாங்கள் குறிப்பிட்டிருந்த நபர்களை விசாரிப்பதற்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று  இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட தீபு, சதீஷன் சந்தோஷ் சாமி ஆகியோர் மனு தாக்கல் செய்திருந்தனர். அந்த வழக்கு நீதிபதி ஆனந்த வெங்கடேஷ் முன்பாக விசாரணை வந்தது.  அப்பொழுது காவல்துறை தரப்பில் மேல்விசாரணை செய்ய அனுமதி கோரி கீழமை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ததாகவும், அந்த அனுமதி கிடைத்திருப்பதால் மேல் விசாரணை  நடைபெற்று வருகிறது.

தற்போது நிலையில் சாட்சிகள் மேலும் சேர்க்கப்பட வாய்ப்பு இருக்கிறது. எனவே இந்த மனுவை தற்போது அனுமதிக்க கூடாது என்று வாதிடப்பட்டது.  அந்த மேல் விசாரணை தொடர்பான விவரங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்வதும் தயாராக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள் இரண்டு வார காலம் அவகாசம் வழங்கி, வழக்கின் மேல் விசாரணை  தொடர்பான அறிக்கையை தாக்கல் செய்வதற்கு காவல்துறைக்கு உத்தரவிட்டு  வழக்கை வரும் 21 ஆம் தேதி தள்ளி வைத்திருக்கிறார்கள்.