அசாம் மாநிலத்தில் உள்ள ஸ்ரீ பூமி மாவட்டத்தில் காவல்துறைக்கு போதைப் பொருள் கடத்துவதாக ரகசிய அறிவிப்பு ஒன்று வந்தது. இதன் அடிப்படையில் காவல்துறையினர் அதிரடியாக வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அருகில் உள்ள மாநிலத்திலிருந்து வந்த வாகனத்தில் சோதனையில் ஈடுபட்ட போது சுமார் 50,000 யாபா போதை மாத்திரைகள் பிடிபட்டன.
இதனை கைப்பற்றிய காவல் துறையினர் வாகனத்தில் போதை பொருள் கடத்திய 5 நபர்களையும் கைது செய்து விசாரணையும் நடத்தி வருகின்றனர். இந்தக் கடத்தல் குறித்து அசாம் மாநில முதல் மந்திரி ஹிமாந்தா விஸ்வா ஷர்மா தனது இணையதள பக்கத்தில் தீவிரமாக செயல்பட்டு போதை பொருளை மீட்ட காவல்துறையினரை பாராட்டி பதிவு ஒன்றை வெளியிட்டு இருந்தார். இந்தப் பதிவு சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.