தமிழ் சினிமாவில் சின்ன திரையில் இருந்து வெள்ளி திரைக்கு வந்து வெற்றிகரமான முன்னணி ஹீரோவாக திகழ்பவர் சிவகார்த்திகேயன். இவர் நடித்த டாக்டர் மற்றும் டான் திரைப்படங்கள் 100 கோடி ரூபாய் வரை வசூல் சாதனை புரிந்தது. கடந்த வருடம் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான பிரின்ஸ் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்ற நிலையில், தற்போது எப்படியாவது வெற்றி படத்தை கொடுத்து விட வேண்டும் என்ற முனைப்பில் சிவகார்த்திகேயன் இருக்கிறார். மண்டேலா படத்தை இயக்கிய மடோன் அஸ்வின் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது மாவீரன் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தில் அதிதி சங்கர் ஹீரோயினாக நடிக்கிறார். இந்த படத்தின் ஓடிடி உரிமையை அமேசான் பிரைம் ஏற்கனவே வாங்கிவிட்டது. இந்நிலையில் படத்தின் சாட்டிலைட் உரிமையை தற்போது சன் டிவி வாங்கியுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. இதனால் மாவீரன் திரைப்படம் ஃப்ரீ ரிலீஸ் வியாபாரத்தில் 100 கோடி ரூபாய் வரை வசூல் சாதனை புரிந்துள்ளது. இது சிவகார்த்திகேயன் ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் மாவீரன் திரைப்படம் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு ரிலீஸ் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.