தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிக்கும் தளபதி விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் நடிகை திரிஷா, நடிகர்கள் அர்ஜூன், சஞ்சய் தத், மன்சூர் அலிகான், சாண்டி மாஸ்டர், மிஷ்கின், கௌதம் மேனன் போன்ற பல பிரபலங்கள் நடித்து வருகிறார்கள். இந்த படத்தின் சூட்டிங் விறுவிறுப்பாக காஷ்மீரில் நடைபெற்று வரும் நிலையில் அண்மையில் சஞ்சய் தத் படப்பிடிப்பில் இணைந்தார்.

இந்நிலையில் நடிகர் சஞ்சய் தத்தை தொடர்ந்து தற்போது மற்றொரு பாலிவுட் பிரபலம் லியோ படத்தில் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது பாலிவுட் சினிமாவில் பிரபலமான இயக்குனராகவும் தயாரிப்பாளராகவும் வலம் வருபவர் கரண் ஜோகர். இவர் தற்போது லியோ படத்தின் ஹிந்தி ரைட்ஸ் உரிமையை வாங்கியுள்ளாராம். ஆனால் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரவில்லை. மேலும் இயக்குனர் கரண் ஜோகர் நடிகை திரிஷா உள்ளிட்ட லியோ படக்குழுவுடன் சேர்ந்து எடுத்த புகைப்படம் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.