தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக வலம் வருபவர் அல்டிமேட் ஸ்டார் தல அஜித். இவர் தற்போது ஏகே 62 திரைப்படத்திற்காக தயாராகி வருகிறார். எச். வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் அஜித் நடித்த துணிவு திரைப்படம் கடந்த ஜனவரி மாதம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்திற்குப் பிறகு ஏகே 62 திரைப்படத்தை விக்னேஷ் சிவன் இயக்குவதாக இருந்தது. ஆனால் கதையில் ஏற்பட்ட சில பிரச்சனைகளால் விக்னேஷ் சிவனை படக்குழு நீக்கிவிட்டு தற்போது மகிழ்திருமேனியை கமிட் செய்துள்ளனர்.

இந்நிலையில் அண்மையில் கிளீன் ஷேவ் செய்துவிட்டு நடிகர் அஜித்து உடல் எடையை குறைத்த புகைப்படம் சோசியல் மீடியாவில் வெளியானது. இந்த புகைப்படம் தீயாக பரவிய நிலையில் ஏகே 62 திரைப்படத்திற்காக தான் நடிகர் அஜித் உடல் எடையை குறைத்ததாக கூறப்பட்டது. தற்போது ஏகே 62 திரைப்படத்திற்காக அஜித் உடல் எடையை குறைக்கவில்லை எனவும் சங்கர் படத்திற்காக தான் அப்படி செய்துள்ளார் எனவும் புது தகவல் வெளிவந்துள்ளது. அதாவது பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் தற்போது கமல்ஹாசனை வைத்து இந்தியன் 2 மற்றும் ராம்சரனை வைத்து ஆர்சி5 போன்ற படங்களை இயக்கி வருகிறார்.

ஆர்சி 15 படத்தில் க்யாரா அத்வானி, அஞ்சலி போன்றோர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றார்கள். இந்த படத்தில் ராம் சரணுக்கு வில்லனாக அஜித் நடிக்க இருக்கிறாராம். இயக்குனர் சங்கர் அஜித்தை அணுகி வில்லனாக நடிக்க வேண்டும் என கேட்டபோது அவர் ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது. பான் இந்தியா படமாக உருவாகும் ஆர்சி 15 படத்தில் அஜித் மட்டும் வில்லனாக நடித்தால் படம் வேற லெவலில் ஹிட் ஆகும் என ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.

ஏற்கனவே வாலி திரைப்படத்தில் நடிகர் அஜித் நெகட்டிவ் ரோலில் நடித்திருக்கிறார். அதன் பிறகும் பல படங்களில் நடிகர் அஜித் நெகட்டிவ் ரோலில் நடித்துள்ளார். நெகட்டிவ் ரோலில் நடிகர் அஜித் நடிக்கும் படங்கள் எல்லாமே சூப்பர் டூப்பர் ஹிட் ஆகிறது. இதனால் ஆர்சி 15 படத்தில் அஜித் வில்லனாக நடிக்க இருப்பதாக வெளிவந்த தகவல் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகாத நிலையில் விரைவில் அறிவிப்பு வரும் என்று கூறப்படுகிறது.