ஒரே நாடு,  ஒரே தேர்தலை அறிவிக்க மத்திய அரசு முனைப்பு காட்டி வரும் நிலையில் நடிகர் விஜய் தனது அரசியல் கட்சியை பதிவு செய்ய முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. நடிகர் விஜயின் அடுத்த நகர்வு இதுதானா ? முக்கியத்துவம் என்ன என்பது குறித்தெல்லாம் அடுத்தடுத்து கருத்துக்கள் வெளியாகி வருகின்றன.

நடிகர் விஜய் அரசியலுக்கு வருவாரா ? கட்சியை தொடங்குவாரா என்ற கேள்வி தொடர்ந்து இருந்து கொண்டு தான் இருக்கிறது. இந்த சூழ்நிலையில் தான் அவர் கட்சியை பதிவு செய்ய போகின்றார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இதனால் அரசியல் களத்தில் அவருக்கான சாத்தியங்கள்,  வாய்ப்புகள் என்ன என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதுகுறித்து பேசிய  அரசியல் விமர்சகர்கள், விஜய் முன்னெடுக்கக்கூடிய மிக முக்கியமான பிரச்சனை வாக்குகள் விற்பனைக்கு அல்ல.  வாக்குகள் விற்பனைக்கு அல்ல என்று அவர் அடிக்கடி கூறுவதற்கு காரணம் ?

ஜனநாயகத்தை காக்க வேண்டும் என்றால் ? வாக்குக்கு பணம் கொடுக்க வேண்டும், பணம் வாங்க கூடாது.  இந்த கொள்கையை தான் அவர் முன்னெடுக்க இருக்கிறார். இதனைத் தான் அவர் முன்னிறுத்தி பல்வேறு இடங்களில் பேசியும்  வந்து இருக்கிறார். அதன் அடிப்படையில் அடுத்த நகர்வு போகும் என்று சொல்கிறார்கள். விஜய் அரசியலுக்கு வருவாரா ? இல்லையா ? என்பது இன்று – நேற்று தொடங்கிய பேசுச்சு அல்ல. அரசியல் வட்டாரங்களில்  கடந்த சில மாதங்களாகவே இது மிக ஆழமாக பேசப்பட்டு வருகின்றது.

அவரை பொறுத்தவரை வாக்கு விற்பனைக்கு அல்ல என்று கூறும்போது மக்கள் கண்டிப்பாக தமக்கு வாக்களிப்பார்கள். எப்படி டெல்லியில் ஊழலுக்கு எதிராக ஆம் ஆத்மி கட்சி ஆரம்பிக்கும் போது ஒரு பெரிய வரவேற்பு கிடைத்ததோ…. அதேபோல் தங்களுக்கும்  வரவேற்பு கிடைக்கும் என்ற எண்ணம் விஜய்க்கும் இருக்கின்றது.

திராவிட சித்தாந்த கட்சிகளான  அதிமுகவும் சரி,  திமுகவும் சரி. வாக்குக்கு பணம் என்பதை  எப்படி கையாள போகிறார்கள் என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். ஆனால் ஒரு விஷயம் வாக்குகள் விற்பனைக்கு அல்ல என்ற கருத்து கண்டிப்பாக வரவேற்கக்கூடிய கருத்தாக இருந்தாலும்,  அது தமிழக அரசியலில் எந்த அளவுக்கு மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.