தமிழகத்தில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் சமீபத்தில் தொடங்கப்பட்ட நிலையில் 1.6 கோடி மகளிர்க்கு வங்கி கணக்கில் ஆயிரம் ரூபாய் செலுத்தும் பணி தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் வங்கிகள் தங்களது நிர்வாக காரணங்களுக்காக மகளிர் உரிமைத்தொகை பணத்தை பிடித்தம் செய்யக் கூடாது என்று வங்கிகளுக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு உத்தரவிட்டுள்ளார்.

ஏற்கனவே டெபிட் கார்டு கட்டணம் மற்றும் குறைந்தபட்ச தொகை இல்லாத காரணங்களால் பல வங்கி கணக்குகளில் தொகை மினிமம் பேலன்ஸ் இருந்துள்ளது. இதனால் உரிமைத்தொகை வங்கிக்கு வந்தவுடன் பணம் பிடித்தம் செய்யப்படுவதாக மகளிர் குற்றம் சாட்டிய நிலையில் தற்போது அமைச்சரின் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.