தமிழ் சினிமாவில் பல வருடங்களாக முன்னணி நடிகர்களாக வலம் வருபவர்கள் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் உலக நாயகன் கமல்ஹாசன். இருவரும் நல்ல நண்பர்கள் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. நடிகர் கமல்ஹாசன் தற்போது சங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார். நடிகர் ரஜினி நெல்சன் இயக்கத்தில் ஜெய்லர் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகர் ரஜினி தன்மகள் ஐஸ்வர்யாவுக்காக செய்யும் விஷயம் மற்றும் நடிகர் கமல்ஹாசன் சிம்புவுக்காக செய்யும் விஷயம் பற்றி தான் தற்போது சோசியல் மீடியாவில் ரசிகர்கள் பேசிக் கொள்கிறார்கள்.

அதாவது ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் லால் சலாம் படத்தில் தன்னுடைய மகளுக்காக ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார். இதேபோன்று சிம்புவின் 48-வது படத்தை இயக்கும் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் கமல்ஹாசன் சிறப்பு தோற்றத்தில் நடிக்க இருக்கிறாராம். இந்த படத்தை கமலின் ராஜ் கமல் பிலிம்ஸ் நிறுவனம் தான் தயாரிக்கிறது. சிறப்பு தோற்றத்தில் ரஜினி மற்றும் கமல்ஹாசனின் கதாபாத்திரங்கள் பேசப்படும் அளவுக்கு இருப்பதாக சொல்லப்படுகிறது. மேலும் இது தான் தற்போது ரசிகர்கள் மத்தியில் சோசியல் மீடியாவில் வைரலாக பேசப்படுகிறது.