சென்னை கலாஷேத்ரா கல்லூரியிலுள்ள பேராசிரியர் மீது பாலியல் புகார் எழுந்திருக்கிறது. இந்த குற்றச்சாட்டுகளுக்கு ஆளான பேராசிரியர் மீது நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்தி மாணவிகள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் பிக்பாஸ் சீசன்-6 நிகழ்ச்சியில் பங்கேற்ற விக்ரமன் கலாஷேத்ரா கல்லூரி மாணவர்களை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக அவர் தன் சமூகவலைதளத்தில் “போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களுக்கு என் ஒற்றுமையை தெரிவிக்க கலாஷேத்ராவுக்கு சென்றேன். அவர்களுக்கு சரியான நேரத்தில் நீதி கிடைக்க முடிந்தவரையிலும் ஆதரவளிப்பதாக உறுதியளித்தேன்” என குறிப்பிட்டுள்ளார். இதனிடையே மாணவிகளின் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.