சமூக ஊடகங்களில் தினசரி பெரும்பாலான வீடியோக்கள் பதிவிடப்பட்டாலும் அவற்றில் ஒரு சில மட்டுமே பார்வையாளர்களை கவர்கிறது. அதிலும் குறிப்பாக விலங்குகளின் வீடியோகளுக்கு  இணையத்தில் தனி ரசிகர் பட்டாளமே இருக்கின்றனர். தற்போது வெளியாகியுள்ள ஒரு வீடியோ காண்பவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அந்த வீடியோவில் ஒரு ஆபத்தான மலைப் பாம்பு கம்பியில் இருந்து தலைகீழாக தொங்கிக் கொண்டிருக்கிறது.

மலைப் பாம்புடன் பறவையின் இறக்கைகளையும் காண முடிகிறது. அதோடு பாம்பு பறவையின் தலையை தன் வாயால் கடித்தப்படி பிடித்துள்ளது. இவ்வாறு கம்பத்தில் தொங்கிக்கொண்டு காகத்தை பதம் பார்த்து வேட்டையாடிய ராட்சத மலைப்பாம்பு ஒன்று தலைகீழாகத் தொங்குவதை காட்டும் வீடியோ சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.