சிறுபான்மையினரில் நலிவடைந்த பிரிவினருக்கு உதவும் வகையில் சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மூலம் கடன் வழங்கப்படுகிறது. அதன்படி தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகத்தின் (டாம்கோ) சார்பாக, கிறிஸ்தவ, முஸ்லிம், சீக்கிய, புத்த, பார்சி மற்றும் ஜெயின் ஆகிய சிறுபான்மையினர்கள் பொருளாதாரத்தில் மேம்பாடு அடைவதை நோக்கமாக கொண்டுள்ளனர். எனவே இதன் பொருட்டு, தனிநபர் கடன், சுயஉதவி குழுக்களுக்கான கடன், கைவினை கலைஞர்களுக்கான கடன் மற்றும் கல்விக்கடன்  உள்ளிட்ட கடனுதவிகளுக்காக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் கடனுதவியை வழங்குவது பற்றிய சிறப்பு முகாம்கள் மாவட்டத்தில் 7 இடங்களில் நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) நடைபெற உள்ளது. இம்முகாம்  காலை 10 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை நடைபெறுகிறது. மேலும் இந்த சிறப்பு முகாம்  நடைபெறும் இடங்கள் கீழே கொடுக்கபட்டுள்ளது. அவையாவன, ஆண்டிப்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம், மதுரை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் போடி கிளை, ராயப்பன்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம், மதுரை மாவட்ட மத்திய வங்கியின் அல்லிநகரம் கிளை, பெரியகுளம் கூட்டுறவு நகர வங்கி, சின்னமனூர் வெற்றிலை பயிரிடுவோர் கூட்டுறவு சங்கம், காமயகவுண்டன்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் . இவ்வாறு தேனி மாவட்ட ஆட்சியர் முரளிதரன் தெரிவித்துள்ளார்.