கோவை அவினாசிலிங்கம் மனையியல் மற்றும் மகளிர் உயர்கல்வி நிறுவனத்தின் 34-வது பட்டமளிப்பு விழா நேற்று நடந்தது. இந்த விழாவில் மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பங்கேற்று பேசியதாவது, “சமுதாய முன்னேற்றத்துக்கு தேவையான நடவடிக்கைகள் மற்றும் புவி வெப்பமயமாதல் உள்ளிட்ட பல பிரச்சினைகளுக்கு மாணவர்கள் தீர்வுகாண வேண்டும் என அறிவுறுத்தி உள்ளார். இப்போது அனைத்து மாநில அரசுகளும் தேசிய கல்விக் கொள்கையை நடைமுறைபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்து உள்ளார்.

இதற்காக நடப்பு ஆண்டுக்கான பட்ஜெட்டில் பிரத்யேகமாக நிதி ஒதுக்கீடு செய்யப்படும் எனவும் கூறியுள்ளார். அதன்பின் பெண்கல்வி மற்றும் பெண்களுக்கு அதிகாரம் அளித்தலில் தமிழகம் முன்னோடி மாநிலமாக விளங்குவதாக தெரிவித்து உள்ளார். அதோடு நாட்டில் அதிகளவில் தமிழகத்தில் உள்ள பெண்கள் தான் வேலைக்கு செல்வதாகவும் தகவல் தெரிவித்து உள்ளார். அதுமட்டுமின்றி பெண்களுக்கு அரசு பணிகளில் தனியாக இடஒதுக்கீடு வழங்கப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.