பாகிஸ்தான் நாட்டில் உள்ள தொலைக்காட்சியில் தி கிச்சன் மாஸ்டர் என்ற பிரபல நிகழ்ச்சி ஒன்று நடைபெற்று வருகின்றது. இந்த நிகழ்ச்சியில் எடுக்கப்பட்ட வீடியோ கிளிப் ஓன்று வைரலாகி வருகின்றது. அதில், சமையல் போட்டி நடக்கும் போது போட்டியாளர் ஒருவர் பிரபல கடையிலிருந்து வாங்கி வந்த பிரியாணியை நடுவர்களுக்கு கொடுத்துள்ளார். ஆனால் அதனை நடுவர்கள் நிராகரித்துள்ளனர். மேலும் அந்த போட்டியாளரை நடுவர்கள் நிராகரித்துள்ளனர்.

ஆனால் இதனை ஏற்க மறுத்த அந்த போட்டியாளர் நிகழ்ச்சியின் போது கூறியதாவது “இந்த நிகழ்ச்சியில் நடுவர்கள் ருசிப்பதற்காக ஒரு தட்டில் கொண்டு வரப்படும் உணவு நீங்கள் தயாரித்ததாக இருக்க வேண்டும் என்று என்னிடம் கூறவில்லை. அதனால் தான் நான் இந்த பிரியாணி பார்சல் வாங்கி வந்தேன். இதனை வாங்குவதற்கு நான் வெகு நேரமாக வரிசையில் நின்று கடுமையாக உழைத்து உள்ளேன்” என்று கருத்து தெரிவித்துள்ளார். இதனை அடுத்து நிகழ்ச்சியிலிருந்து போட்டியாளர் வெளியேற மறுத்ததால் அவருக்கும் நடுவர்களுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த மோதலில் நடுவர்களில் ஒருவர் கோபத்தில் நிகழ்ச்சியை விட்டு வெளியேறியுள்ளார்.