தமிழகத்தில் அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் ஆண்டு இறுதித் தேர்வு ஏப்ரல் மாதம் முடிவடைந்த நிலையில் கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து 1 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வருகின்ற ஜூன் 6ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. இந்த நிலையில் பள்ளிகள் திறக்கும் நாளான ஜூன் 6ஆம் தேதி செய்ய வேண்டியவை குறித்து வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிக்கல்வித்துறை வழங்கி உள்ளது.

அதன்படி ஜூன் 6ஆம் தேதி மாணவர் சேர்க்கை கொண்டாட்டம் நடத்தப்பட உள்ளது. கல்வி இணை செயல்பாடுகளில் மாணவர்கள் பங்கேற்பதை உறுதி செய்ய வேண்டும். அனைத்து மாணவர்களும் பள்ளிக்கு வருவதை உறுதி செய்ய வேண்டும். பள்ளி வளாகம் தூய்மையாக இருக்க வேண்டும் என வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளது.