இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம்தோறும் புதுவிதமான மோசடிகள் நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக அரசு எச்சரிக்கை அறிவிப்புகளை வெளியிட்டு வந்தாலும் மோசடிக்காரர்கள் தினம் தோறும் புதுவிதமான யுக்திகளை பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்த நிலையில் வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறுவோரை நம்பி ஏமாறாமல் இளைஞர்கள் கவனமாக இருக்க வேண்டும் என தமிழக அரசு எச்சரித்துள்ளது. இது குறித்து அயலக தமிழர் நலத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், நேர்காணலுக்கு செல்லும் முன் நிறுவனம் குறித்து விசாரிக்க வேண்டும். விசா எடுப்பதற்கு முன்பு குறிப்பிட்ட பணிவாய்ப்பு குறித்து துணை தூதரகத்தின் விசாரிக்க வேண்டும் என பல அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளது.