கடந்த சில மாதங்களுக்கு முன்பு தமிழக வெற்றிக்கழகம் என்ற புதிய கட்சியை நடிகர் விஜய் தொடங்கினார். இவர் 2026 ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட உள்ளதாக அறிவித்துள்ள நிலையில் இப்போதிலிருந்தே அதற்கான பணியில் தீவிரம் காட்டி வருகிறார்.

இந்த நிலையில் உலக பட்டினி தினமான மே 28ஆம் தேதி தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் அன்னதானம் வழங்க உள்ளதாக தமிழக வெற்றி கழகத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தெரிவித்துள்ளார். விஜயின் அறிவுறுத்தலின்படி பட்டினி இல்லா உலகத்தை ஏற்படுத்த வேண்டும், அனைவருக்கும் உணவு கிடைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி இந்த சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.